Paareer Gethsamane Poongavilene Nesaraiye Lyrics in Tamil

பாரீர் கெத்சமனே பூங்காவிலேன் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தோனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடல்கள் எனக்காயே – பாரீர்

2. அப்பா இப்பத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்

3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்

4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்

5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர்

6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்துடுவேன் – பாரீர்

Paareer Gethsamane Poongavilene Nesaraiye Lyrics in English

Paareer Kethsamane Poongavilene Nesaraiye
Paaviyanakaai veenduthal
Seithidum satham thonithiduthe

1. Thegamellaam varundhi sogamadaindhavarai
Thevaadhi thevan eka sudhan padum paadalkal enakaaye – Paareer

2. Appa ippaththirame neekkum nin siththamanaal
Eppadiyum siththam seiyya ennai thaththam seithaare endraare – Paareer

3. Irathaththin vervaiyaale meththavume nanaindhe
Immaanuelan ullamurugiye veenduthal seithanare – Paareer

4. Mummurai tharai meedhe thaangonnaa vedhanaiyaal
Munnavan thaane veezhndhu jepithaare paathakar meetpurave – Paareer

5. Anbin arul mozhiyaal aaruthal alipavar
Thunba velaiyil thetruvaarinriye nonthu alarugindraar – Paareer

6. Ennaiyum thammaip pola maatrum immaa nesaththai
Enni yenniye ullam kanindhu naan endrum pugazhnduduveen – Paareer