என் தேவனே உம்மை உயர்திடுவேனே - En Devane Ummai Uyarthiduvane

En devane ummai uyrthiduvene Lyrics in Tamil

என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே

1. ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியனுக்குத் திடனான தேவன் நீரே
பெரு வெள்ளத்தில் தப்பிக்கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிழலானோர் நீரே - என்

2. மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
நம்பினோனின் நிந்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே - என்

3. உமக்காக என்னை உருவாக்கினீரே
உதிர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
பெயரை சொல்லி பூரணமாய் அழைத்துக் கொண்டீரே
புதியதொன்று என்னிலே செய்திட நீரே - என்

4. கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே - என்

En devane ummai uyrthiduvene Lyrics in English

En devane ummai uyrthiduvene
um naamathai endrum thudhithiduvene

1. Yelaikku Pelanana karthar neerea
eliyanukku thidanana devan neerea
peru vellaththil thappi kolla adaikkalam neerea
veyilukku odhungikolla nilalanoor neerea - en

2. maranathai jayamaga vilungineerea
maanidar kannerai thudaippavarea
nambinorin nindhaigalai neekupavarea
nitham nitham adhisayangal seibavar neera - en

3. umakkaaga ennai uruvakineerea
uthira kirayam thandhu ennai metpavarea
peyarai solli pooranamai alithu konderea
pudhiyadhondru ennilea seithida neerea - en

4. Kalvi maanin naavai enakku tharubavarea
kaalaithorum katrukolla seibavarea
neethiyin karathaal ennai thangubavarea
nithiya nithiya velichamaga iruppavar neerea - en

Post a Comment

0 Comments

Close Menu