1 vs 450 — கர்மேல் மலையில் நடந்த மாஸ் போர்! 🔥⚡
Hollywood movie-la வர்ற climax fight மாதிரி, பைபிள்ல ஒரு செம்ம dramatic அண்ட் cinematic சம்பவம் இருக்கு. 1 Kings 18-ல வர்ற தீர்க்கதரிசி எலியா (Elijah) vs 450 பாகால் (Baal) பூசாரிகள் இடையே நடந்த Ultimate Showdown தான் இது! ஒரு தனி ஆளா நின்னு 450 பேரை எப்படி எதிர்கொண்டாருன்னு இந்த Blog-ல பார்ப்போம்!
ஆகாப் என்ற ராஜாவும், அவனோட மனைவி யேசபேலும் இஸ்ரவேல் மக்களை வழிதவறச் செஞ்சு, பாகால் என்ற விக்கிரகத்தை கும்பிட வச்சாங்க. இதனால தேசத்துல தொடர்ச்சியா 3 வருஷமா ஒரு சொட்டு மழை கூட இல்லாம கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போதான் எலியா களத்துல இறங்குறாரு. ராஜா ஆகாப் முன்னாடி போய் கெத்தா, "இஸ்ரவேல் மக்கள் எல்லாரையும், 450 பாகால் பூசாரிகளையும் கர்மேல் மலை உச்சிக்கு கூட்டிட்டு வாங்க, அங்க உண்மையிலேயே யார் நிஜமான கடவுள்னு பாத்துருவோம்!" அப்படின்னு ஒரு சவால் விடுறாரு.
கர்மேல் மலையில ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நிக்கிறாங்க. எலியா கூட்டத்தைப் பார்த்து, ரெண்டு காளைகள் வெட்டப்படும், ரெண்டு மரப்பீடங்கள் தயார் செய்யப்படும், ஆனா யாருமே நெருப்பு மூட்டக் கூடாதுன்னு சொல்றாரு. நீங்க உங்க தெய்வத்தைக் கூப்பிடுங்க, நான் என் கடவுளைக் கூப்பிடுறேன், எந்தக் கடவுள் வானத்துல இருந்து நெருப்பை அனுப்பி பலியை ஏத்துக்கிறாரோ, அவரே நிஜமான தேவன் என்று சவால் விடுகிறார். மக்களும் இந்த யோசனைக்குச் சம்மதிக்கிறார்கள்.
முதல்ல 450 பாகால் பூசாரிகள் ஆரம்பிக்கிறாங்க. காளையை வெட்டி வச்சிட்டு, காலையில இருந்து மதியம் வரைக்கும் "பாகாலே! எங்களோட ஜெபத்தைக் கேள்!" அப்படின்னு கத்திக்கிட்டே பீடத்தைச் சுத்தி நடனம் ஆடுறாங்க. ஆனா ஒரு சின்ன தீப்பொறி கூட வரல. மதியத்துக்கு மேல எலியா அவங்களை செமையா கிண்டல் பண்ணி, இன்னும் சத்தமா கூப்பிடுங்க, ஒருவேளை உங்க கடவுள் யோசனையில இருக்கலாம், இல்ல தூங்கிட்டு இருந்தா எழுப்புங்கன்னு சொல்றாரு. மாலையானது, அவங்க உடம்பைக் கீறி ரத்தம் வர அளவுக்குக் கத்தியும் எந்தப் பலனும் இல்லை.
இப்போ எலியாவோட Turn வருது. எலியா உடைஞ்சு கிடந்த கடவுளின் பீடத்தை 12 கற்களை வச்சு மறுபடியும் கட்டுறாரு. அப்புறம் மரம், காளை எல்லாத்தையும் வச்சிட்டு, மக்கள் முன்னாடி 4 பெரிய குடம் தண்ணீரை பீடத்து மேல ஊற்றச் சொல்றாரு. ஒரு தடவை இல்ல, 3 தடவை மொத்தம் 12 குடம் தண்ணி ஊத்தப்படுது. பீடத்தைச் சுத்தி வெட்டப்பட்ட வாய்க்கால் முழுவதும் தண்ணி நிரம்பி வழியுது. ஈரமான மரத்துல தீப்பிடிக்காதுங்கிறது தான் சயின்ஸ், ஆனா எலியா நம்பிக்கையோட இருந்தாரு.
மாலை பலி செலுத்தும் நேரம் வந்ததும் எலியா அமைதியா பீடத்துக்கிட்ட வந்து நிக்கிறாரு. எந்த அலப்பறையும் இல்லாம, "ஆபிரகாமின் தேவனே! நீர் மட்டுமே உண்மையான கடவுள் என்றும், நான் உமது ஊழியன் என்றும் இன்றைக்கு இந்த மக்களுக்குக் காண்பியும்" அப்படின்னு ஒரு எளிய 2-வரி ஜெபம் பண்றாரு. அடுத்த நொடியே வானத்துல இருந்து ஒரு பயங்கரமான அக்கினி இறங்கி வந்து, பீடத்துல இருந்த பலி, மரம், கற்கள், மண்ணைக்கூட சாம்பலாக்கியதுடன் வாய்க்காலில் இருந்த அத்தனை தண்ணீரையும் உறிஞ்சி எடுத்தது. இதைப் பார்த்த மக்கள் எல்லாரும் பயத்துல முகம் குப்புற விழுந்து, "கர்த்தரே உண்மையான தேவன்!" அப்படின்னு கத்தினாங்க.
tags: bible stories for kids, bible stories,sunday class bible stories

0 Comments