தாசரே இத்தரணியை அன்பாய் பாடல் வரிகள் | Thasare Iththaraniyai Anbaai Lyrics

தாசரே இத்தரணியை அன்பாய் பாடல், இந்த உலகத்தை இயேசுவுக்குச் சொந்தமாக்க வேண்டும் என்ற ஆவிக்குரிய அழைப்பை வெளிப்படுத்தும் அருமையான தமிழ் கிறிஸ்தவ பாடல். இயேசுவின் அன்பை அறிவித்து, இருளை நீக்கி, வெளிச்சத்தை வீசவும், துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்யவும் இந்த பாடல் அழைக்கிறது.

தாசரே இத்தரணியை அன்பாய் – தமிழ் பாடல் வரிகள்

தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம்
மாஇருள் நீக்குவோம்
வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

4. இந்துதேச மாது சிரோமணிகளை
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட

5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

Thasare Iththaraniyai Anbaai – Thanglish Lyrics

Thaasare Iththaraniyai Anbaai
Yesuvukku Sonthamaakkuvom

Nesamaai Yesuvai Kooruvom
Avarai Kaanbippom
Maa Irul Neekkuvom
Velicham Veesuvom

1. Varuththappattu Paaram Sumandhorai
Varundhi Anbaai Azhaiththiduvom
Uriththaai Yesu Paava Paaraththai
Namathu Thukkaththai Namathu Thunbaththai Sumandhu Theerththaare

2. Pasiyutrorukkum Piniyaaligatkum
Patchamaaga Udhavi Seivom
Usitha Nanmaigal Nirainthu Thamai Marandhu
Yesu Kanindhu Thirindhanare

3. Nerukkappattu Odukkappattorai
Neesarai Naam Uyarththiduvom
Porukka Vonnaa Kashtaththukkul
Nishtooraththukkul Padukuzhikkul Vizhundhanare

4. Indhu Desa Maadhu Shiromaniyai
Vindhaiyolikkul Varavazhaippom
Sundhara Gunangal Adainthu Arivil Uyarnthu
Nirbandhangal Theerndhu Sirandhil Adangida

5. Maarkkam Thappi Nadapporai Saththiya
Vazhikkul Vandhida Serththiduvom
Ookkamai Jebiththiduvom Naam
Muyandriduvom Naam Jeyiththiduvom

தாசரே இத்தரணியை அன்பாய் – பாடல் பற்றிய குறிப்பு

இந்த பாடல் இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லவும், துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்யவும், சத்தியத்தின் வழியில் மக்களை அழைத்துச் செல்லவும் விசுவாசிகளை ஊக்கப்படுத்துகிறது.

பசியுற்றோர், நோயாளிகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் துன்பப்படுகிறவர்களுக்கு அன்புடன் உதவி செய்து, இயேசுவின் சுவிசேஷத்தை உலகம் முழுவதும் அறிவிக்க வேண்டும் என்பதே இந்த பாடலின் முக்கியமான செய்தியாகும்.

Post a Comment

0 Comments

Close Menu