Kartharai Paadiye Potriduvomae Song Lyrics in Tamil
கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரைபில்லை அவரன்பு கரையற்றதே
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே
1. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் - இயேசு
2. போராட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்கத் திடமளித்தார் - இயேசு
3. கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லை இல்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார் - இயேசு
4. சீயோனில் சிறப்புடன் சேர்ந்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முக முகமாகவே காண்போமே அவரை
யுக யுகமாகவே வாழ்ந்திடுவோம் - இயேசு
Kartharai Paadiye Potriduvomae Song Lyrics in English
kartharai paadiyae potriduvomae
karuththudan thuthippom iniya naamamathai
kadalin aalam pol karunnaiyotirakkam
karaillai avaranpu karaiyatrathae
Yesu nallavar Yesu vallavar
Yesuvaippol vaeror naesarillaiyae
1. kodumaiyor seeral peruvellam pola
adikkaiyil mothiyae madhilkalin meethae
belanum ivvaelaikkum eliyorkkum thidanaay
veyilukkum othungum vinn nilalumaanaar - Yesu
2. poraattam sothanai ninthai avamaanam
koramaay vanthum kirupaiyil nilaikka
thaeva kumaaranin visuvaasaththaalae naan
jeeviththu sevikkath thidamaliththaar - Yesu
3. kallum mullukalulla katina paathaiyile
kalakkangal nerukkangal agamadhai varuththa
ellaiyillaa edhir emakku vanthalum
vallavar Yesu nam mun selgiraar - Yesu
4. seeyonil sirappudan sernthida Yesu
seekkiram varum naal nerungi vanthiduthae
muga mugamaagavae kaannpomae avarai
yuga yugamaagavae vaalndhiduvom - Yesu
0 Comments