உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே Um Paadham Panindhen Ennalum Thudhiea Song Lyrics

Um Paadham Panindhen Ennalum Thudhiea Song Lyrics in Tamil

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம் பாதம்

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம் பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம் பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம் பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம் பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம் பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம் பாதம்


Um Paadham Panindhen Ennalum Thudhiea Song Lyrics in English

Um Paadham Panindhen Ennalum Thudhiea
Ummaiyandri Yaaraippaduven - Yesaiya
Undhan Anbu Ullam Ponguthe

1. Parisuthame Paravasame
Paranesarulle Varam Porule
Thedinathaal Kandadaindhen
Paadida Padalgal Eendhalitheer - Um Paadham

2. Pudhu Eannaiyal Pudhu Bhelathaal
Pudhiya Kirubai Pudhu Kaviyaal
Nirappi Nitham Nadathugindrer
Noodhana Saalomil Serthiduver - Um Paadham

3. Nerukathil Ummai Alaithen
Nerungi Udhavi Enakkalitheer
Thisai Ketengum Alaindhidamal
Theeviram Vandhennai Thaangukindrir - Um Paadham

4. En Mun Sellum Um Samoogam
Enakku Alikkum Ilipparuthal
Umathu Koolum Um Thadiyum
Unmaiyai Ennai Thetridudhe - Um Paadham

5. Kanichedi Neer Nilaithirukkum
Kodiyai Adiyen Padarndhilanga
Kilai Narukki Kalai Pidungi
Karthare Kaathennai Sutham Seitheer - Um Paadham

6. En Idhaya Theivame Neer
Enathu Iraiva Aruyire
Nesikkiren Yesuve Um
Nesamugam Endru Kandiduven - Um Paadham

7. Seerudaney Perudaney
Sirandhu Jolikkum Kodumudiyil
Seekiramai Serthiduveer
Seeyonai Vaanjithu Naadiduven - Um Paadham

Post a Comment

0 Comments

Close Menu