Endhan Yesu Enakku Nallavar Song Lyrics in Tamil
எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்
1. கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால் - எந்தன்
2. அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
துதிக்கப் படத்தக்கவரே - எந்தன்
3. புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும் - எந்தன்
4. எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன் - எந்தன்
Endhan Yesu Enakku Nallavar Song Lyrics in English
enthan Yesu enakku nallavar
avar endrendrum pothumaanavar
aabaththil viyaathiyil en pirayaasangalil
avar endrumae pothumaanavar
1. kalvaari malaimael eariyae
mul mudi sirasil sootiyae
en vaethanai yaavaiyum neekki ennil
puthu jeevanai oottinathaal - Endhan
2. avar aathiyum anthamumae
theiva sinaekaththin pirappidamae
pathinaayirangalil mika siranthavarai
thuthikka padaththakkavarae - Endhan
3. puvi yaaththirai mika katinam
deva kirupaikal ennaeramum
pakal maekasthampam iraavil akkinisthampam
anuthinam ennai vali nadaththum - Endhan
3. enthan aekkam ellaam neengippom
kaneer yaavaiyum thutaiththiduvaar
Yesu iraajaavaay vaanaththil velippadum naal
naan avarudan paranthiduvaen - Endhan
0 Comments