வழி நடத்தும் வல்ல தேவன் Vali Nadathum Valla Devan Jesus Song Lyrics

Vali Nadathum Valla Devan Christian Song Lyrics in Tamil

வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் நாயகனே

1. பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே – பரமானந்தத்தோடே
செல்வோம் – பரமன் நாட்டிற்கே
இயேசு பரன் தம் வீட்டினிற்கே
2. போகும் வழியைக் காட்டி நல்ல

போதனை செய்வார் – ஏகும் சுத்தர்
மீது கண்கள் இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்

3. அந்தகார சக்திகள் எம்மை
அணுகிடாமலே – சொந்தமான
தம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரே
இயேசு துணையாய் நிற்பாரே

4. வாதை நோய்கள் வன்துன்பங்கள்
வருத்திய போதும் – பாதையில்
நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்
இயேசு திடப்படுத்திடுவார்

5. காடானாலும் மேடானாலும் கடந்து
சென்றிடுவோம் – பாடானாலும்
பாடிச் செல்வோம் பரவசமுடனே
இயேசு பரன் தான் நம்முடனே

6. அன்றன்றுள்ள தேவை தந்து
ஆதரிப்பாரே – என்றென்றும்
துதிகனமும் மகிமையவர்க்கே
இயேசு மகிபனாமவர்க்கே

Vali Nadathum Valla Devan Christian Song Lyrics in English

Vazhi Nadaththum Valla Devan
Vaazhvil Naayaganae Vaazhvil Naayaganae
Nam Vaazhvil Thayaganae

1.Paradhaesa Prayanigalae Naam Vaalum Paarinilae
Paramaananthathode selvom
Paraman Naattinirkae
Yesu Paran Tham Veetinirkae

2.Pogum Vazhiyai Kaati Nalla Podhanai Seyvaar
Aegum Suththar Meethu Kangal
Iruththi Nadaththuvaar
Yesu Thiruththi Nadaththuvaar

3. Andhakaara skthigal emmai
anugidamale - sondhamaana
tham janathai soolndhu kaaparea
yesu thunaiyai nirparea

4. vaadhai nooigal vanthunbangal
varuthiya boodhum - paadhaiyil
naam serndhidamal bhalappaduthiduvaar
yesu dhidapaduthiduvaar

5.Kaadanalum Maedaanaalum Kadanthu
Senriduvom - Paadanalum
Paadi Selvom Paravasamudanae
Yesu Paran Thaan Nammudanae

6. andranrulla thevai thandu
aadharipparey - endrendrum
thuthiganamum magimaiyavarkkea
yesu magipanaavarkkea

Post a Comment

0 Comments

Close Menu