கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் Kartharai Nambiye Jeevipom Tamil Christian Songs Lyrics

Kartharai Nambiye Jeevipom Jesus Song Lyrics in Tamil

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சாமாதானம் தங்கும் - கர்த்தரை

2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் - கர்த்தரை

3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் - கர்த்தரை

4. நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசிர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே - கர்த்தரை

5. அன்பு மிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரை தள்ளிடார்
தாங்கி அணைத்திடுவார் - கர்த்தரை

Kartharai Nambiye Jeevipom Jesus Song Lyrics in Tamil

Kartharai Nambiye Jeevippom
kavalai kastangal theerndhidum
kaividaa kaathidum paramanin
karangalai naam patri kollvom

1. jeeva devan pin selluvom
jeeva olithanai kandadaivom
manadhin kaarirul neengidavea
maa samaathanam thangum - kartharai

2. unmai vali nadathidum
uthamanukkendrum karthar thunai
kangal avan meedhu vaithiduvaar
karuthaay kaathiduvar - kartharai

3. ullamadhin paarangalai
ukkamaay kartharidam solluvom
ikkattu nerathil koopiduvom
yesu vandhadharippar - kartharai

4. needhimaanin sirasin mel
nithiya aasir vandhirangum
kirubai nanmaigal thodarumea
ketpathu kidaikkumea - kartharai

5. anbu migum annalivar
arumai yesuvai nerunguvom
thammandai vandhorai thallidaar
thaangi anaithiduvaar - kartharai

Post a Comment

0 Comments

Close Menu