Nesaravar En Neaser Avar Full Song Lyrics in Tamil
நேசரவர் என் நேசரவர்
நேசரிலெல்லாம் விசேஷித்தவர்
சோகமடைந்தேன் நேசமதால் - நேசரவர்
1.வெண்மையும் சிவப்புமானவரே
கண்ணை கவர்ந்திடுபவர் அவரே
பதினாயிரங்களில் சிறந்தவரே
அதிசயமானவர் அவர் பெயரே
இவரென் ஆத்தும நேசரே
வருவார் எனக்காய் வேகமே - நேசரவர்
2.அவர் தலை முழுவதும் பொன்மயமாமே
அவர் தலை மயிர் சுருள் சுருளாமே
காகத்தின் நிறம் அவர் முடியாமே
லோகத்தின் ஒளி விளக்கவராமே - நேசரவர்
3.அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்
கவரும் புறாக் கண்கள் போன்றவைகள்
பாலிலே கழுவப்பட்டவைகள்
நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள் - நேசரவர்
4. அவரின் கன்னங்கள் உதடுகளாம்
மலர்களின் வாசனை வீசிடுமாம்
தங்க வளையல் போல் அவர் கரமாம்
தந்தத்தை போல் அங்கம் உடையவராம் - நேசரவர்
5. ரூபமதில் அவர்க்கிணை அவரே
லீபனோன் மகிமை உடையவரே
கேதுரு போல் அவர் உயர்ந்தவரே
ஏதமிலா சிறப்பானவரே - நேசரவர்
6. வார்த்தை பேசிடும் வாய் மதுரமாமே
வார்த்தைகள் கிருபை பொழிந்திடுமே
வார்த்தை என்பது அவர் ஒரு பெயரே
வார்த்தைகளால் துதி சாற்றிடவே - நேசரவர்
7.துள்ளிக் குதித்து மலை மேட்டினிலே
வந்திடும் நேசரின் தொனியதுவே
ஆரவார சப்தம் முழங்கிக்கொண்டே
மேகத்தில் ஜோதியாய் தோன்றுவாரே - நேசரவர்
Nesaravar En Neaser Avar Full Song Lyrics in English
Nesaravar en nesaravar
nesarilellam viseshittavar
sogamadaindhen nesamathaal - nesaravar
1. venmaiyum sivappumaanavarea
kannai kavarndhidubavar avarea
padhinaayirangalil sirandhavarea
adhisiyamaanavar avar peyarea
ivaren aathuma nesarea
varuvaar eanakkaay vegamea - nesaravar
2. avar thalai muluvathum ponmayamaame
avar thalai mayir surul surulaamey
kaagathin niram avar mudiyaamea
logathin oli vilakkavaramea - nesaravar
3. avar kangal kannir niraindhavaigal
kavarum pura kangal pondravaigal
paalilea kaluvapattavaigal
nerthiyaay padhikkapattavaigal - nesaravar
4. avarin kannangal uthadugalaam
malargalin vaasanai veesidumaam
thanga valaiyal pol avar karamaam
thandhaththai pol angam udaiyavaraam - nesaravar
5. roopamadhil avarkkinai avarea
leebanon magimai udaiyavarea
kedhuru pol avar uyarndhavarea
eathamila sirappaanavarea - nesaravar
6. vaarthai pesidum vaay madhuramamea
vaarthaigal kirubai polindhidumea
vaarthai enbadhu avar oru peyarea
vaarthaigalaal thudhi saatridavea - nesaravar
7. thulli kudhiththu malai mettinilea
vandhidum nesarin thoniyathuvea
aaravaara saptham mulangikkondea
megaththil jothiyaaythondruvaarea - nesaravar
Nesaravar En Neaser Avar Full Video Song and Lyrics
0 Comments