கிருபையிதே தேவ கிருபையிதே Kirubaiyidhae Deva kirubaiyidhae Lyrics

Kirubaiyidhae Deva kirubaiyidhae christian song lyrics in tamil

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே – இயேசுபரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே — கிருபையிதே

2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்ந்தனரே – பூரணமாய்
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய — கிருபையிதே

3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் — கிருபையிதே

4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் — கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் — கிருபையிதே

6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் – வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை — கிருபையிதே

Kirubaiyidhae Deva kirubaiyidhae christian song lyrics in tamil

Kirubaiyidhae Deva kirubaiyidhae
Thaangi nadaththiyadhae
Yesuvilae pon naesarilae
Agamagilndhae naam aanandhippom

1. Aaruyir anbaraai engaludanae
Jeeviya paathaiyilae – Yesuparan
Anuthinamum vazhi nadandhae
Avaradhu naamaththil kaaththanarae - kirubaiyithea

2. ethanaiyo parisuthargal maraindhe
magimai serndhanarea - pooranamaay
kaathanarea karthar emmai
karunaiyinal thooya sevai seiyya - kirubaiyithea

3. Anbin agalamum neelam uyaramum
Aazhamum arinthunara – anukkirakiththaar
Kiristhuvilae oru manaiyaai
Sirushtiththae niruththinaar avar sudharaay - kirubaiyithea

4.Nalla poraattam poraadi jeyiththae
Niththiya jeevanai naam – pettridavae
Visuvaasaththil nilaiththiduvom
Asaiyaadhu azhaippinai kaaththukkolvom - kirubaiyithea

5. aaviyum manavaatiyum aavaludan
vrumendralaikindrare - vaarumenbeer
seeyoney nee paar unakkaay
nayagan yesu thaam velipaduvar - kirubaiyithea

6. Vaarththaiyinaal avar theerththaar enthan
Viyaathiyum vaethanaiyum – vaiththiyaraay
Yesuvallaal saarnthidavo
Ikamathil veremak kaarumillai - kirubaiyithea

Post a Comment

0 Comments

Close Menu