சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே Seeyoanilay en thida asthibaaram Cristhuvay Lyrics

Seeyonile En Dhida Asthibaram Christuve Lyrics in Tamil

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2)

1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே (2) - சீயோனிலே

2.புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் (2) - சீயோனிலே

3.வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் (2) - சீயோனிலே

4.மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி (2) - சீயோனிலே

5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில் முடிவுவரை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே - சீயோனிலே

Seeyonile En Dhida Asthibaram Christuve Lyrics in English

Seeyoanilay en thida asthibaaram Kristhuvay – Avar
Naan endrum nambum kanmalai

1. Kalangiduveino Padhariduveino
Kartharil visuvaasam irukkaiyilay
Asaiyaa en nambikkai nangooramay
Yeisuvil maathiramay - Seeyoanilay

2. Puyal adithaalum alai moadhinaalum
Evar enakkedhiraai elumbinaalum
Enakku ettaadha uyarathilay
Eduthavar niruthiduvaar - Seeyoanilay

3. Vyaadhiyinaalay kaayam varundhi
Vaadiyay marana nilal soolinum
Visuvaasathin karathaal Avar
Vaakkai naan pattriduvein - Seeyoanilay

4. Maa parisutha visuvaasathaalay
Maa parisutha sthalam yeigidavay
Thirai valiyaam Tham sareerathinaal
Thirandhaaray dhooya vali - Seeyoanilay

5. Naan visuvaasippoar innar endrarivein
Ennaiyay padaithittein Avar karathil
Mudivu varai ennai nadathiduvaar
Muttrumaai ratchippaaray - Seeyoanilay

Post a Comment

0 Comments

Close Menu