மகிமை மேல் மகிமை Magimai Mel Magimai Lyrics

Magimai Mel Magimai Adaindhiduven Lyrics in Tamil

மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மறுரூபமாவேன் மனமதிலே
மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் முகமே

1. உந்தன் பாதம் என்னை பலியாய்
உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்
ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலன் விளங்கும்
தேற்றி உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால் - மகிமை

2. தேவ சாயல் தேவ சமுகம்
தேவ பிள்ளைகள் அடையும் பாக்கியம்
எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்
என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால் - மகிமை

3. ஜீவ ஜலமே பொங்கி வருதே
ஜீவ ஊற்றுகள் திறந்தனவே
தம் கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்
தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால் - மகிமை

4. பாதம் ஒன்றே போதும் என்றேன்
பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்
இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே
என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால் - மகிமை

5. திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்
தூய வாழ்க்கையின் தேவை அதுவே
தேவ சேவையிலே பாடு சகித்திடவே
தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால் - மகிமை

6. ஆவி ஆத்மா தேகம் முழுவதும்
அன்பர் இயேசுவின் சொந்தமாமே
பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும்
பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால் - மகிமை

Magimai Mel Magimai Adaindhiduven Lyrics in English

Magimai mel magimai adaindhiduven
maruroopamaaven manamathilea
magilndhidave tharisikkavea paran mugamea

1. undhan paadham ennai paliyaay
unmai manadhudan voppadaithean
eatru kondarulum deva bhelaney vilangum
thetri uyirpithidum tham aaviyinaal - magimai

2. deva saayal deva samugam
deva pillaigal adaiyum paakiyam
endhan vaanjai idhea endru serndhiduven
ennai nirappidumea tham aaviyinaal - magimai

3. jeeva jalamea pongi varuthea
jeeva vootrugal thirndhanavea
tham karam pidithean angu vali nadathum
thaagam theerthiduven tham aaviyinaal - magimai

4. paadham ondrea podhum endrean
pesum aandavar thoniyum ketten
inba vaakugalea endhan bhojanamea
ennai bhalapaduthum tham aaviyinal - magimai

5. divya gunangal naadi jebithean
thooya vaalkaiyin theavai adhuvea
deva sevaiyilea paadu sagithidavea
thaarum porumai bhelan tham aaviyinal - magimai

6. aavi aathumaa thegam muluvathum
anbar yesuvin sondhamaamey
pooranam arulum aayathapaduthum
paadi parandhiduven tham aaviyinal - magimai

Post a Comment

0 Comments

Close Menu