பரலோக இராஜ்ஜிய வாசி Paraloga Raajiya Vaasi Lyrics in Tamil

Paraloga Raajiya Vaasi Christian Song Lyrics in Tamil

பரலோக இராஜ்ஜிய வாசி
பரன் இயேசுவின் மெய் விசுவாசி
புவி யாத்திரை செய் பரதேசி
பரன் பாதம் நீ மிக நேசி

1. ஆபிரகாம் ஈசாக்குடனே
ஆதிப் பிதாக்கள் யாவருமே
தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே
தேடியே நாடியே சென்றனரே
அந்நியரே பரதேசிகளே – பரலோக

2. திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் சுய தேசம்
தூதர்கள் வாழும் பரமதேசம்
தூயப் பிதா ஒளி வீசும் தேசம்
மேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோக

3. தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
கூட்டங்களாக திரண்டு செல்லுவோம்
குடும்பம் குடும்பமாக செல்லுவோம்
ஜாதி ஜனங்களும் கூடிச் செல்லுவோம்
சேனாபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோக

4. நன்மையும் மேன்மையுமாம் நகரம்
நல் அஸ்திபார புது நகரம்
வாக்குத்தத்தின் திட நகரம்
விசுவாசத்தால் அடையும் நகரம்
ஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோக

5. சாவு துக்கம் அங்கே இல்லையே
சாத்தானின் சேனை அங்கில்லையே
கண்ணீர் கவலை அங்கில்லையே
காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோக

6. வெண் வஸ்திர பவனி நடக்க
வெண் குருத்தோலை கொடி பறக்க
பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க
பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க
கர்த்தரை காண்போம் கண் ஜொலிக்க – பரலோக

7. பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
பாவமே வேண்டாம் இயேசு போதும்
லோகமே வேண்டாம் இயேசு போதும்
ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோக

8. நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்
நல் மனச் சாட்சி நாடிடுவேன்
இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன்
அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோக

Paraloga Raajiya Vaasi Christian Song Lyrics in English

paraloga raajjiya vaasi
para yesuvin mei visuvaasi
puvi yathirai sei paradesi
paran paadham nee miga nesi

1. abiragam eesakkudaney
aathi pithakkal yavarume
devan untakina mei sthalamey
thediye naadiye chendranarea
anniyare paradesigalea - paraloga

2. thirumbiye paarom marantha desam
theeviram selvom suya thesam
thoothargal vaalum parama desam
thooya pitha oli veesum thesam
melaaga paktharin sontha desam - paraloga

3. thanithaniye yathirai selluvom
kootangalaaga thirandu selluvom
kudumbam kudumbamaaga sellvuvom
jaathi janangalum koodi chelluvom
senaapathi karthar pin selluvom - paraloga

4. nanmaiyum menmaiyumaam nagaram
nal asthibaara puthu nagaram
vaakuthathathin thida nagaram
visuvaasaththaal adiyum nagaram
erukindrom seeyon sigaram - paraloga

5. saavu thukkam ange illaiyea
saathanin senai angillaiyea
kannir kavalai angillaiyea
kaarirul konjamum angillaiyea
panjam pasi ondrum angillaiyea - paraloga

6. ven vasthira pavani nadakka
ven kurutholai kodi parakka
peridu sthothira thoni mulanga
peruvellam oosi pattolikka
kartharai kaanbom kan jolikka - paraloga

7. pon porul vendaam yesu podhum
man aasi ventam yesu pothum
paavamea vendaam yesu poothum
logamey vendaam yesu pothum
aathum aratchagar yesu pothum - paraloga

8. nambikkai ponga paadiduven
nal manasatchi naadiduven
iththarai yaathirai kadanthiduven
akkarai sernthu vaalnthiduven
antha thinam endru kandituven - paraloga

Post a Comment

0 Comments

Close Menu