இராஜா உம்மைப் பார்க்கணும் Raja ummai parkanum Lyrics in Tamil

Raaja Ummai Parkanum Lyrics in Tamil

இராஜா உம்மைப் பார்க்கணும்
இராப்பகலாய் துதிக்கணும்
வருகைக்காய் காத்திருக்கின்றேன்
எப்போது வருவீர் ஐயா

1. இறுதிக்காலம் இதுவே என
அறிந்து கொண்டேன் நிச்சயமாய்
உறக்கத்தில் இருந்து நான்
உமைக்காண விழித்துக் கொண்டேன்

வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே
வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன்

2. மணமகனை வரவேற்கும்,
மதி உடைய கன்னிகை போல
விளக்கோடு ஆயில் ஏந்தி
உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும்

3. உண்மையுள்ள ஊழியனாய்,
நீர் கொடுத்த தாலந்தை – உம்
பயன்படுத்தி பெருக்கிடுவேன்
மகிழ்ச்சியில் பங்கடைவேன்

4. தாரளமாய்க் கொடுத்திடுவேன்
தாங்கிடுவேன் ஊழியங்கள்
அனாதை ஆதரவற்றோர்
கண்ணீரைத் துடைத்திடுவேன்

5. ஊழியத்தில் உதவிடுவேன்
புத்தி சொல்வேன் போதிப்பேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
எப்போதும் துதித்திடுவேன்

6. அந்தகார கிரியைகளை
அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்
இச்சைக்கு இடங்கொடாமல்
இயேசுவையே தரித்துக் கொண்டேன்

7. குடிவெறி களியாட்டம்
வேசித்தனம் விட்டுவிட்டேன்
சண்டைகள், குறை சொல்லுதல்
அடியோடு வெறுத்துவிட்டேன்

8. வீண்பெருமை தேடாமல்
பொறமை கொள்ளாமல்
இழிவான உணர்வுகளை
சிலுவையிலே அறைந்துவிட்டேன்

Raaja Ummai Parkanum Lyrics in English

Raja ummai paarkanum
iraappakalaay thuthikkanum
varukaikkaay
kaathirukkiren
eppothu varuveer iyya

1. iruthikaalam ithuve eana
arinthu konden nichayamaay
urakkathil irunthu naan
umaikkaana viliththu konden

varavendum varavendum viraivaakave
valimelea vili vaithu kaathirukkiren

2. manamaganai varaverkkum
mathi udaiya kannikai pola
vilakkodu aayil eanthi
umakkaga velichamanen - varavendum

3. unmaiyulla uliyanaay
neer kodutha thalanthai - um
payanpaduthi perukkiduven
magilchiyil pangadaiven

4. thaaralamay koduthiduven
thaangiduven uoliyangal
anaathai aatharavatroor
kannirai thuthithiduven

5. uliyathil uthaviduven
puthi solluven pothippen
iraivaakku uraithiduven
eppothum thuthithiduven

6. anthakaar kiriyaikalai
agatrivitten erinthu vitten
ichaikku idam kodamal
yesuvai thariththu konden

7. kudi veri kaliyattam
vesithanam vittuvitten
sandaigal kurai solluthal
adiyodu veruthu vitten

8. veen perumai thedaamal
poramai kollaamal
ilivaana unarvukalai
siluvaiyil arainthuvitten

Post a Comment

0 Comments

Close Menu