1.போதித்து நடத்துகின்ற
துணையாளரே
கண்வைத்து நடத்துகின்ற
ஆலோசகரே-2
(நான்) வலப்பக்கம் சாய்ந்தாலும்
இடப்பக்கம் சாய்ந்தாலும்
வழி இதுவே என்று நடத்துகிறீர்-2-உம்மை
2.கண்களை உம் மேலே
பதித்து வைக்கின்றேன்
கால்களை வலைக்கு
நீங்கலாக்கி விடுகிறீர்-2
(நான்) தடுமாறும் போதெல்லாம்
கூப்பிடும் போதெல்லாம்
கிருபையினால் என்னை தாங்குகிறீர்-2-உம்மை
0 Comments