நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி
Neerindri vaazhvaedhu iraivaa Lyrics in English
Neerindri vaazhvaedhu iraivaa
Um ninaivindri magizhvaedhu dhaevaa
Ulagathil nooraandu naan vaazhndha poadhum
Um illathil vaazhum oru naalae poadhum
0 Comments