அறுவடை மிகுதி ஆளோ இல்லை என்பது இயேசுவின் அன்பையும், உலக மக்களின் இரட்சிப்புக்கான தேவையையும் எடுத்துரைக்கும் அருமையான தமிழ் கிறிஸ்தவ பாடல். அறுவடை மிகுதியாக இருந்தாலும் பணியாளர்கள் குறைவாக இருப்பதால், சபையோர் எழுந்து தேவனுடைய பணியில் ஈடுபட வேண்டும் என்ற அழைப்பை இந்த பாடல் வழங்குகிறது.
அறுவடை மிகுதி ஆளோ இல்லை – தமிழ் பாடல் வரிகள்
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அன்பரின் கதறல் கேட்டிடாதோ?
இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க
எழும்பிடுவோம் நாம் சபையோரே
1. நானிலம் முழுதும் எழுநூறு கோடி
நாசத்தின் வழியை நாடிடுதே
இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க
எழும்பிடுவோம் நாம் சபையோரே
2. அமைதியும் இல்லை நம்பிக்கை இல்லை
அழுகையும் கண்ணீரும் வாழ்க்கையிலே
உறக்கமும் இல்லை முழு உணவில்லை
உணந்திடுவீர் இதை சபையோரே
3. மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை
வாதையில் வாடிடும் கூட்டத்தைப்பார்
ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை
அன்பினை காட்டவும் யாருமில்லை
4. நம்பிக்கையற்ற கல்லறை நாடி
நாளினில் லட்சங்கள் செல்கிறதே
திறப்பினில் நிற்க ஆளில்லை என்று
திகைத்து கதறிடும் இயேசுவைப்பார்
5. அலறிடும் பிள்ளையின் குரலினை கேட்டும்
அழுவதின்றி வேறென்ன செய்வார்
யாரை அனுப்புவேன் யார் போவான் என்றார்
கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ
6. அன்பரே வந்தேன் அழுகையை கண்டேன்
அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையினை
பாரினில் கழுதையாய் சுமந்தம்மை சென்று
பாதத்தில் விடுவேன் என் ஜீவனையே
Aruvadai Miguthi Aalo Illai – Thanglish Lyrics
Aruvadai Miguthi Aalo Illai
Anbarin Kadharal Kettidaadho?
Yesuvin Anbu Nammaiyum Nerukka
Ezhumbiduvom Naam Sabaiyore
1. Naanilam Muzhuthum Ezhunooru Kodi
Naasaththin Vazhiyai Naadiduthe
Yesuvin Anbu Nammaiyum Nerukka
Ezhumbiduvom Naam Sabaiyore
2. Amaidhiyum Illai Nambikkai Illai
Azhugaiyum Kanneerum Vaazhkkaiyile
Urakkamum Illai Muzhu Unavillai
Unanthiduveer Idhai Sabaiyore
3. Mirugam Pol Uzhaiththum Varumaiyin Thollai
Vaathaiyil Vaadidum Koottaththaip Paar
Aatruvaarillai Thetruvaarillai
Anbinai Kaattavum Yaarumillai
4. Nambikkaiyatra Kallarai Naadi
Naalinil Latchangal Selgirathe
Thirappinil Nirka Aalillai Endru
Thigaiththu Katharidum Yesuvaip Paar
5. Alaridum Pillaiyin Kuralinai Kettum
Azhavathindri Verennna Seivaar
Yaarai Anuppuven Yaar Povaan Endraar
Katharalai En Ullam Kettidaadho
6. Anbare Vandhen Azhugaiyai Kanden
Arpaniththen Endhan Vaazhkaiyinai
Paarinil Kazhudhaiyaai Sumandhammai Sendru
Paadhaththil Viduven En Jeevanaiye
அறுவடை மிகுதி ஆளோ இல்லை – பாடல் பற்றிய குறிப்பு
இந்த பாடல் உலக மக்களின் துன்பங்களையும் இரட்சிப்பின் தேவையையும் நினைவுபடுத்தி, இயேசுவின் அன்பினால் சபையோர் எழுந்து சேவை செய்ய வேண்டும் என்று அழைக்கிறது. நம்பிக்கையற்றவர்களுக்கு இயேசுவின் அன்பையும் நற்செய்தியையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்த பாடலின் முக்கியமான செய்தியாகும்.
மக்களின் கண்ணீர், வறுமை, வேதனை மற்றும் நம்பிக்கையற்ற நிலையை கண்டு, “யாரை அனுப்புவேன்?” என்ற தேவனுடைய அழைப்புக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று இந்த பாடல் ஊக்கப்படுத்துகிறது.
0 Comments