கிருப கிருபதான் | Kiruba Kirubathan Tamil Christian Song Lyrics

கிருப கிருபதான்
நான் நிர்மூலமாகாமல் இருப்பது
கிருப கிருபதான்
நான் உம் பாதம் துதி சொல்லி நிற்பது (2)

நிற்பது நடப்பது பாடுவது ஓடுவது
எழுவது தொழுவது

அழுத நான் சிரிப்பது
தோற்ற நான் ஜெயிப்பது
அழுத நான் சிரிப்பது
தோற்ற நான் ஜெபிப்பது (2)

1. நீர் என்னோடு பேசாவிட்டால்
அந்த நாள் இருள் என்பேன்
நான் உம்மோடு பேசாவிட்டால்
என் காலம் வீண் என்பேன் (2)

கதைபோல கழிந்தன நாட்கள்
காரணம் என்சொல்வேன்
காலம் இனி செல்லாதே
என்ன செய்ய போகிறேன் (2)

2. நீர் என்னை நினைத்துவிட்டால்
இன்னும் கொஞ்சம் ஓடுவேன்
கேட்கும் வரம் தந்துவிட்டால்
இன்னமும் பாடுவேன் (2)

புகைபோல ஒழிந்தன காலம்
காரணம் என்சொல்வேன்
உம் கணக்கில் நான் எழுதப்பட
என்ன செய்யபோகிறேன் (2)

Kiruba Kirubathan
Naan nirmoolamaagaamal iruppathu
Kiruba Kirubathan
Naan um paatham thuthi solli nirpathu (2)

Nirpathu nadappathu paaduvathu oduvathu
Ezhavathu thozhuvathu

Azhutha naan sirippathu
Thotra naan jeyippathu
Azhutha naan sirippathu
Thotra naan jebippathu (2)

1. Neer ennodu pesaavittaal
Antha naal irul enben
Naan ummodu pesaavittaal
En kaalam veen enben (2)

Kathai pola kazhinthana naatkal
Kaaranam en solven
Kaalam ini sellaadhe
Enna seiya pogiren (2)

2. Neer ennai ninaithuvittaal
Innum konjam oduven
Ketkum varam thanthuvittaal
Innamum paaduven (2)

Pugai pola ozhintha kaalam
Kaaranam en solven
Um kanakkil naan ezhuthappada
Enna seiyapogiren (2)

Post a Comment

0 Comments

Close Menu