எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் | Engirundho Oru Anbin Kural | Tamil Christian Song Lyrics

🖨️ Print Lyrics

எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல்

எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் ஒன்று
என் செவியினில் கேட்கின்றது – (2)

குரல் கேட்ட பின்னாலே
துன்பப் புயல் எல்லாமே
பறந்து ஓடியது

1. என்னை வாழ வைத்தது இன்று பாட வைக்குது
அது அன்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவின் அன்பது – (2)
எங்கிருந்தோ – 3

2. வருத்திடும் பாரம் தவித்திடும் நேரம்
மகனே வா என்றது – (2)
தாய் பசு கன்றினை சேர்த்து அன்போடு
முகர்வது போல் தாவி அணைக்கின்றது – அந்த (2)
– என்னை

3. சோர்ந்திடும் நேரம் கண்ணீரும் வெள்ளம்
மகனே வா என்றது (2)
கோழி தன் சிறகினை விரித்து தன் குஞ்சுகள்
சேர்ப்பது போல (காப்பது போல) தாவி அணைக்கின்றது – அந்த (2)
– என்னை

Engirundho Oru Anbin Kural

Engirundho oru anbin kural ondru
En seviyinil ketkindrathu – (2)

Kural ketta pinnale
Thunba puyal ellame
Parandhu odiyadhu

1. Ennai vaazha vaiththadhu indru paada vaikkudhu
Adhu andrum indrum endrum maara
Yesuvin anbathu – (2)
Engirundho – 3

2. Varuththidum baaram thaviththidum neram
Magane vaa endradhu – (2)
Thaai pasu kandrinai serththu anbodu
Mugharvadhu pol thaavi anaikkindrathu – andha (2)
– Ennai

3. Sornthidum neram kanneerum vellam
Magane vaa endradhu (2)
Kozhi than siraginai viriththu than kunjugal
Serppadhu pola (kaappadhu pola) thaavi anaikkindrathu – andha (2)
– Ennai

Post a Comment

0 Comments

Close Menu