மோட்ச யாத்திரை செல்கிறோம் | Motscha Yaathirai Selgirom | Christian Song Lyrics in Tamil

1. மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் – இம்மாய லோகம்
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்

ஆனந்தமே ஆ ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2. சத்திய சுவிசேஷகம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய இராஜ்ஜிய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே – ஆனந்தமே

3. அள்ளி தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்கும் அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே – ஆனந்தமே

4. மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்

5. கர்த்தர் என் அடைக்கலம் கவலை
இல்லையே – இக்கட்டு துன்ப
நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்

6. ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
எக்காள தொனியுடன் வருகிறார்



Motcha Yaathirai Selgirom – Christian Song Lyrics in Thanglish

1. Motcha yaathirai selgirom
Meloga vaasigal – immaaya logam
Thaandiye em veedu thondruthe
Kadandhu selgirom karaiyin orame
Kaathirundhu raajyam kandadaivom

Aananthame aa aananthame
Aandavarudan naam endrum aaluvom
Aadhi murpithaakkalodu thootharumai
Aarparippudan koodi vaazhuvom

2. Saththiya suvishegam eduthuraiththume – tham
Niththiya iraajjiyam makkalai aayaththamaakkave
Desamengume alaindhu selgirom
Nesar Yesu vaakuraigal nambiye – aananthame

3. Alli thoovidum vidhai sumandhu selgirom tham
Niththiya iraajjiyam makkalai aayaththamaakkave
Desamengum alaindhu selgirom
Nesar Yesu vaakuraigal nambiye – aananthame

4. Megasthambam akkini velichcham kaattiye
Nal egamaai vanaanthira vazhi nadaththuvaar
Ilakkai nokkiye thavaridaamale
Ippuvi kadandhu akkarai servom

5. Karththar en adaikkalam kavalai
Illaiye – ikkatthu thunba
Neramo kalakkamillaiye
Kashtam neekkuvaar kavalai pokkuvaar
Kaividaamal niththamum nadaththuvaar

6. Aaravaaraththodemma azhaiththu sendrida tham
Aavalodu vaanile thoothargal soozhnthida
Kaakka vallavar nal vaakkuraitthavar
Ekkaala thoniyudan varugiraar

Post a Comment

0 Comments

Close Menu