நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய் Lyrics

Naathan aruliya perum kirubaigalukaai Lyrics in Tamil

1. நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே
நாவினாலே பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால்

அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்
எண்ணில்லாத நன்மைகட்காய்
அல்லேலூயா பாடிடுவேன்

2. இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்
சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்
நிந்தை துன்ப துயர நேரங்களிலும்
உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் - அன்பின்

3. மீட்டுக்கொண்டீர் மானிடரின் நடுவினின்று
நீதியின் கனியாய் மகிமையில் துலங்க
நற்குல திராட்சைக் கொடியாய் உம்மோடிணைந்து
நாதனே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க - அன்பின்

4. மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு
பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே
உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி
உந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே - அன்பின்

5. ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்
ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே
தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க
தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன் - அன்பின்

Naathan aruliya perum kirubaigalukaai Lyrics in Tamil

1. Naathan aruliya perum kirubaigatkaai
Nandriyaal en ullam pongi vazhindhiduthe
Naavinaale paadi potra naatkal pothumo
Nal paathai thanil thodarnthennai nadathiyathaal

Anbin nesare naan ummai potruven
Ennillaatha nanmaigatkaai
Hallelujah paadiduven

2. Yesuve neer enthan pakkam illaathirunthaal
Sothanaiyaam vellathile maandiruppen naan
Ninthai thunba thuyara nerangalilum
Um neethiyin valakkarathaal ennai thaangineer - Anbin

3. Meettukkondeer maanidarin naduvinindru
Neethiyin kaniyaai magimaiyil thulanga
Narkula thiraatchai kodiyaai ummodinaindhu
Naathane um thottathile naanum nilaikka - Anbin

4. Melogathil ummaiyallaal yaarundenakku
Boologil neerallaathu veraasaiyillaiye
Um aalosanaiyin padi ennai nadathi
Undhan magimaiyile yetrukkolveere - Anbin

5. Ottam mudiththa parisuththar parathil
Oynthirukkindraar thangal araigalile
Thaaraniyil naanum enthan ottam mudikka
Thegam aathmaa aaviyaiyum oppuvikkindren - Anbin

Post a Comment

0 Comments

Close Menu