நன்றியால் பொங்குதே எமதுள்ளம் Song Lyrics
நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய்பல நன்மைகட்காய்
நாள்தோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா
1. கடந்த வாழ்வில் கருத்துடனே
கண்மணிபோல் நம்மைக் காத்தனரே
கண்ணீர் கவலையினை மாற்றினாரே
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா
2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதை நடத்தினாரே
ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை அல்லேலூயா
3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே
ஆயிரம் நாவுகள் தான் போதுமா
4. பாவ சேற்றில் அமிழ்ந்த எம்மை
பாச கரம் கொண்டு தூக்கினாரே
கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர்
கருத்துடன் காத்தனரே - அல்லேலூயா
5. பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
பொற்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம்
ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே
நேத்திரமாய் துதிப்போம் - அல்லேலூயா
Nandriyaal Pongudhae Emadhullam Song Lyrics in Thanglish
Nandriyaal pongudhae emadhullam
Naadhan seypala nanmaigatkaai
Naalthorum nalamudan kaathanarae
Nandriyaal sthotharippom Halleluyah
1. Kadandha vaazhvil karuthudaney
Kanmanipol nammai kaathanarae
Kanneer kavalaiyinai maatrinaarae
Kanivudan sthotharippom Halleluyah
2. Jeevan sugam belan yaavum thandhu
Jeeviya paadhai nadathinaarae
Jeeva kaalamellaam sthotharippom
Jeevanin Adhipadhiyai Halleluyah
3. Arpudha karam kondu nadathinaarae
Adhisayangal pala purindhanarae
Aayiram naavugal thaan podhumaa
4. Paava saettril amizhdha emmai
Paasa karam kondu thookkinaarae
Kan malai mael nammai niruthi avar
Karuthudan kaathanarae - Halleluyah
5. Poruthanai baligal dhinam seluthi
Porparan Yesuvai vaazhthiduvom
Sthothira paaththiran Yesuvaiyae
Naethiramaai thudhithiduvom - Halleluyah
0 Comments