என் இயேசுவின் சந்நிதியில் | En Yesuvin Sannidhiyil Lyrics in Tamil

En Yesuvin Sannidhiyil Lyrics in Tamil

என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
என்னைக் காத்திடுமே அவர் நாமமதே
துதி கீதங்கள் பாடிடுவேன்

1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்
கருணைக் கரம் தாங்கிடுவார்
எந்தன் கல்வாரி நாயகர் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே - என்

2. பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே - என்

3. மோட்ச பாக்யத்தை நினைத்திடவே
பொங்குதே உள்ளம் சந்தோஷத்தால்
வேகம் வந்திடுவார் எந்தன் ஆத்ம நேசர்
என்னை தம்முடன் சேர்த்திடவே - என்

4. பாரில் பரிசுத்த ஜீவியத்தை
தேவ பயத்துடன் காத்து கொள்வேன்
எந்தன் ஆவியும் ஆத்ம சரீரம் முற்றும்
என்றும் கர்த்தருக் கொப்புவிப்பேன் - என்

5. தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க
கர்த்தர் இயேசு தம் மகிமையுடன்
வானில் வெளிப்படுவார் சீயோன் இராஜனவர்
என்னை சீயோனில் சேர்த்திடுவார் - என்

En Yesuvin Sannidhiyil Lyrics in English

En Yesuvin sannidhiyil
Endrum geethangal paadiduvaen
Ennaik kaaththidumae avar naamamathae
Thuthi geethangal paadiduvaen

1. Kanneer avar thudaiththiduvaar
Karunaik karam thaangiduvaar
Enthan kalvaari naayagar Yesuvaalae
Ellaap paavangal aganridumae - En

2. Paraman kural kaetkumpothu
Paramaanandham adainthiduvaen
Enthan avasiyangal avar kirubaiyaalae
Athi seekkiram kidaiththidumae - En

3. Motcha baagyaththai ninaiththidavae
Ponguthae ullam santhoshaththaal
Vegam vanthiduvaar enthan aathma naesar
Ennai thammudan saerththidavae - En

4. Paaril parisuththa jeeviyaththai
Deva bayaththudan kaaththu kolvaen
Enthan aaviyum aathma sareeram mutrum
Endrum karththaruk koppuvippaen - En

5. Deva senaigal aarpparikka
Karththar Yesu tham magimaiyudan
Vaanil velippaduvaar Seeyon raajanavar
Ennai Seeyonil saerththiduvaar - En


பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):

'என் இயேசுவின் சந்நிதியில்' என்பது இறைவனின் பிரசன்னத்தில் எப்போதும் துதிபாடி மகிழ்ந்திருப்பதை வெளிப்படுத்தும் பாரம்பரியமிக்க தமிழ் கிறிஸ்தவப் பக்திப் பாடல் ஆகும். முக்கியக் கருப்பொருள்: இயேசுவின் சந்நிதியில் கண்ணீர் துடைக்கப்படும், பாவங்கள் மன்னிக்கப்படும் மற்றும் வாழ்க்கையின் தேவைகள் அவருடைய கிருபையால் சந்திக்கப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இப்பாடல் விவரிக்கிறது. பரலோக வாழ்வின் மேன்மையையும், இயேசுவின் இரண்டாம் வருகையில் சீயோனில் அவருடன் இணைவதையும், இந்த உலகில் பரிசுத்தமாகவும் தேவபயத்துடனும் வாழ வேண்டும் என்ற அர்ப்பணிப்பையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது.

Search Keyword : En Yesuvin Sannidhiyil song lyrics in Tamil and English (Tanglish), En Yesuvin Sannithiyil Endrum Geethangal Paadiduven lyrics, traditional Tamil Christian devotional songs, Jesus worship songs lyrics Tamil, old Tamil Christian hymns, En Yesuvin Sannathiyil PPT lyrics, Tamil Christian songs chords and lyrics.

Post a Comment

0 Comments

Close Menu