Thudhippen Thudhippen Devanai Lyrics in Tamil
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்பவனை – 2
அதிசயமானவனை அதிலும் மேலானவனை – 2 – துதிப்பேன்
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறாத் துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் – 2 – துதிப்பேன்
2. இன்றைய தினம் வரை காத்தீரே
எல்லோரையும் கூட்டிச் சேர்த்தீரே – 2
நின் கிருபையால் கடந்து வந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2 – துதிப்பேன்
3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கு ஆனந்தமே – 2
அல்லேலூயா உமக்கல்லேலூயா
எல்லா நாளும் உமக்கல்லேலூயா – 2 – துதிப்பேன்
Thudhippen Thudhippen Devanai Lyrics in Tamil
Thudhipaen thudhipaen dhaevanai
Thudhigal matthiyil vasippavanai – 2
Adhisayamaanavanai adhilumaelaanavanai – 2 – Thudhipaen
1. Kadantha thunbathin kaalangalil
Adaindha aaraa thuyarangalil – 2
Aarudhal thaerudhal alithittaar
Maaraadha yaesuvukku aanandham – 2 – Thudhipaen
2. Inraiyathinam varai kaatheerae
Elloaraiyum kootti saertheerae – 2
Nin kirubaiyaal kadandhuvandhoam
Anbae aaruyirae aanandham – 2 – Thudhipaen
3. Aanandhamae paramaanandhamae
Annalai andinoarkaanandhamae – 2
Allaeluyaa umakkallaeluyaa
Ellaa naalum umakkallaeluyaa – 2 – Thudhipaen
பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):
'துதிப்பேன் துதிப்பேன் தேவனை' என்பது துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சர்வவல்ல தேவனை போற்றிப் பாடும் ஒரு பாரம்பரிய நன்றிப் பாடல் ஆகும். துன்ப காலங்களிலும் ஆறாத துயரங்களிலும் ஆறுதலையும் தேறுதலையும் தந்த மாறாத இயேசுவை மகிமைப்படுத்துவதோடு, இந்நாளளவும் பாதுகாத்துக் கூட்டிச் சேர்த்த அவருடைய எல்லையற்ற கிருபையை இப்பாடல் நினைவுகூருகிறது. தேவனைச் சார்ந்து வாழ்பவர்களுக்குக் கிடைக்கும் பரமானந்தத்தையும், எந்நாளும் அவருக்கு உரித்தான அல்லேலூயா ஸ்தோத்திரங்களையும் இப்பாடல் அழகாக எடுத்துரைக்கிறது.
Search Keyword : Thudhipaen thudhipaen dhaevanai lyrics, Thudhipaen thudhipaen devanai lyrics in Tamil, Thudhigal mathiyil vasippavanai song lyrics, traditional Tamil Christian songs, Christian praise and worship songs lyrics, Aanandhame paramaanandhame lyrics Tamil, Thanksgiving Christian songs Tamil PPT lyrics, Tamil Christian lyrics chords.
0 Comments