தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே
1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் - எந்த
சேதமும் வந்தணுகாமல்
இந்தப் புதுதினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை - தேடுங்கள்
2. நல்ல சுகம் பெலன் தந்து - தம்
வல்ல நல் ஆவியும் ஈந்து
வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார் - தேடுங்கள்
3. ஊண் உடை தந்தா தரித்து - இந்த
ஊழிய பாதையில் காத்து
கூப்பிடும் வேளை செவிகொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே - தேடுங்கள்
4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் - என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசைய்யா இயேசுவை ஸ்தோத்தரிப்போம் - தேடுங்கள்
5. காலையில் ஸ்தோத்திரக் கீதம் - இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல்ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகளும் செய்துழைப்பேன் - தேடுங்கள்
6. கர்த்தரை நான் எப்பொழுதும் - என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதை காட்டிடுவார் - தேடுங்கள்
Thedungal Kandadaiveer
Deva Devanin Thooya Thirumugam Kaana
Thediduvom Adhikaalame
1. Chendra Vaalnaalellaam Kaathaar - Endha
Sedhamum Vandhanugaamal
Indha Pudhudhinam Kandadaiya
Thandhanare Thamadhu Kirubai - Thedungal
2. Nalla sugam belan thandhu - tham
valla nal aaviyum eendhu
valla pisasai jeyameduthu
chella tham anbennile polindhaar - thedungal
3. Oon udai thandha tharithu - indha
ooliya paadhaiyil kaathu
koopidum velai sevi koduthu
ketidum yaavaiyum eendhanare - thedungal
4. jeevanum ulla naalellaam - en
devanai keerthanam panni
osaiyulla kai thaalathode
nesiya yesuvai sthotharippom - thedungal
5. Kalaiyil Sthothira Geetham - Indha
Velaiyil vedathin thiyaanam
naljeba thoobam enadhu inbam
narkiriyaigalum seithulaipen - thedungal
6. kartharai naan eppoluthum - en
kan munnil niruthi nooka
naal muluthum avar pin nadakka
ner vali paadhai kaatiduvar - thedungal
0 Comments