போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் - Potriduvoam Pugalndhiduvoam Jesus Song Lyrics in Tamil

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே

1. தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெம்மைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம்

2. கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியும் சோதனையில்
கலங்கிடுமோ என் விசுவாசமே

3. ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இனைத்தனரே நம்மை தம் சுதராய்

4. ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியோரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே

5. சீயோனே மா சாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தே


potriduvom pugalndhiduvom
porparan Yesuvaiyae
puviyil avar pol vaerillaiyae

1. thanthaiyaippol tholinilae
maintharemmaich sumanthavarae
ennaalumae avar naamamae
innilaththae naam thuthiththiduvom

2. kana makimai pukalataiya
karunnaiyaal jenippiththathaalae
kanaleriyum sothanaiyil
kalangidumo en visuvaasamae

3. gnalamellaam kanndathisayikka
aaviyin apishaekaththaalae
aeka sareeramaay niruththa
inaiththanarae nammai tham sutharaay

4. aadhi apposthala thoothukalaal
atiyorai sthirappaduththi
sethamillaa jeyamaliththae
kiristhuvin narkanthamaakkinaarae

5. seeyonae maa saalaem nagare
seeratainthae thikalvaayae
sevippaayae un naesaraiyae
sirappudanae ippaarthalaththae

Post a Comment

0 Comments

Close Menu