Kartharai nan ekkalamum sthotharipen Lyrics in Tamil
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்திரிப்பேன்
அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்
1. கர்த்தருக்குள் எந்தன் ஆத்துமாவும்
களித்து மேன்மை பாராட்டிடுதே
ஒருமித்தே நாம் உயர்த்திடுவோமே
கருத்தாய் அவர் நாமமே - கர்த்தரை
2. தூய பரன் முகம் நோக்கிடுவோர்
சூரிய சோபையாய் மாறிடுவார்
ருசிக்க இன்பமே இயேசுவின் அன்பே
சுகிக்க நல்லவரே - கர்த்தரை
3. ஜீவனை யீந்தார் தம் சாவினாலே
வேதனை நீக்கினார் நோவினாலே
அற்புதமாய் எந்தன் ஜீவியமதையே
தற்பரன் மாற்றுகிறார் - கர்த்தரை
4. தேற்றி அப்போஸ்தல தூதுகளால்
மாற்றிடுவார் அவர் ரூபமதாய்
ஊற்றியவர் புது ஜீவன் எந்நாளும்
ஏற்றுவார் ஜெயக் கொடியே - கர்த்தரை
5. அக்கினியின் ஊடே நடந்திடினும்
விக்கினமின்றியே நான் துலங்க
ஆக்குவார் பொன்னினும் என் விசுவாசம்
மிக்கதோர் மகிமையதாய் - கர்த்தரை
6. சீயோனே உன் பெலன் தரித்திடுவாய்
வீற்றிடுவாய் எழுந்தெருசலேமே
உன் துயர் நீக்கிடும் இன்பமணாளன்
வந்திடும் வேளையிதே - கர்த்தரை
Kartharai nan ekkalamum sthotharipen Lyrics in English
Kartharai nan ekkalamum sthotharipen
avar thudhi eppodhum en vaayilirukkum
1. kartharukkul endhan aathumavum
kalithu meanmai paratiduthea
orumithea naam uyrthiduvome
karuthaai avar naamame - kartharai
2. thooya paran mugam nookiduvor
sooriya sobhaiyaay maariduvar
rushikka inbame yesuvin anbe
sugikka nallavare - kartharai
3. Jeevanai Eendhar tham saavinale
vedhanai neekinar noovinalea
arputhamai endhan jeeviyamadhaiye
tharparan maatrugirar -kartharai
4. thetri aposthala thodhugalal
matriduvar avar roobhamadhaai
utriyavar pudhu jeevan ennalum
etruvar jeya kodiye - kartharai
5. akkiniyin udey nadandhidinum
vikkinamindriye naan thulanga
aakuvar ponninum en visuvasam
mikkathor magimaiyadhaai - kartharai
6. seeyone un bhelan tharithiduvaai
veetriduvaai elundheruselame
un thuyar neekidum inba manalan
vandhidum velaiyidhea - kartharai
0 Comments