நம்பியே வா நல்வேளையிதே உன் Nambiyea Vaa Nal Velaiyithea Lyrics

Nambiyea vaa nal velaiyithea un Lyrics in Tamil

நம்பியே வா நல்வேளையிதே உன்
நேசர் இயேசுவையே நம்பிடுவாய்

1. கர்த்தரிடம் விசுவாசமே
கடுகளவு உனக்கிருந்தால்
கதறிடும் உன்னைக் காத்திடுவார்
கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் - நம்பியே

2. திக்கற்றோரின் தகப்பனவர்
தவிக்கும் விதவையின் தேவன் அவர்
அமைதியிழந்து கண்ணீரோடே
அலைந்திடாமல் நீ நம்பியே வா - நம்பியே

3. கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தர் செவி மந்தமாகமில்லை
தேவனின் முன்னே உன் வினைகள்
தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே - நம்பியே

4. பாவங்களை மன்னித்திடும்
பரலோக அதிகாரமுள்ள
இயேசு கிறிஸ்து முன்னிலையில்
இன்றுன்னைத் தாழ்த்தி நம்பிடுவாய் - நம்பியே

5. சூரியன் கீழ் உள்ளவை
சகலமும் வெறும் மாயையல்லோ
மானிடர் என்றும் மாறிடுவார்
மாறாத இயேசுவை நம்பிடுவார் - நம்பியே


Nambiyea vaa nal velaiyithea un Lyrics in English

Nambiyea vaa nal velaiyithea un
nesar yesuvaiyea nambiduvaay

1. kartharidam visuvaasamea
kadugalavu unakkirundhaal
kadharidum unnai kaathiduvaar
kalangidamal nee nambiduvaay - nambiyea

2. thikkatrorin thagappanavar
thavikkum vidhavaiyin devan avar
amaithiyilandhu kannirodea
alaindhidamal nee nambiyea vaa - nambiyea

3. kartharin kai kurugavillai
karthar sevi mandhamagavillai
devanin munnea un vinaigal
thadutu jebaththai thalliduthea - nambiyea

4. paavangal mannithidum
paraloga adhigarammulla
yesu chiristu munnilaiyil
indrunnai thalthi nambiduvaai - nambiyea

5. sooriyan keel ullavai
sagalamum verum maayaiyallo
maanidar endrum maariduvaar
maaratha yesuvai nambiduvaar - nambiyea

Post a Comment

0 Comments

Close Menu