ஜீவியமே ஒரே ஜீவியமே Jeeviyamea Orey Jeeviyame Christian Tamil Song Lyrics

Jeeviyamea Ore Jeeviyame Christian Song Lyrics in Tamil

ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே

1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் - ஜீவியமே

2. நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர்
அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்
நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர்
இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் - ஜீவியமே

3. திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
என்ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர்
துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை - ஜீவியமே

4. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்த பின் வருவதேது
கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் - ஜீவியமே

5. அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்
கல்வி செல்வம் சுகம் பொருள் அனைத்தும்
செல்வேன் சொல்வேன் இயேசுவை வழி என
வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் - ஜீவியமே

Jeeviyamea Ore Jeeviyame Christian Song Lyrics in English

Jeeviyamea orey jeeviyame
anda saraasaram anaithilume
mevi vasikkum manidhar anaiththum
bhoomiyil vaalvadhu oru tharamey

1. pirappathum irappadhum deiva seyal
idaiyil iruppadhu vaalakiyaagum
yesuvil saarvathaal parisutham kaanum
parisuthar aatchiyil satchi koorum
idhai vidil mudivadhu veelchiyagum - jeeviyamea

2. niththam nammai vittu selvaar paarire
avar yavarum sellum avvidam paarir
alaralum pulambalum udalthanai keeralum
naragathin dhinasari kaatchi kealieer
irakkathin vali kaanaar kathiyum kaanbeer - jeeviyamea

3. thirappin mugam nirkka atkal thevai
thiyagathin paadhikku selvor thevai
enjanam aliyuthea en eangum aandavar
thukkathai thanikkum seasar thevai
mun varuvor yaarkkum idhuvea velai - jeeviyamea

4. ennipar kalindhitta kaalamadhai
kadhaiyai pool manidharin naatkal sellum
ulagathu sevai sagaiyil ooyum
unnudan maritha pin varuvadhedhu
christhuvin sevai nilaithu nirkkum - jeeviyamea

5. arpanam thandhaiyea kai alithean
kalvi selvam sugam porul anaithum
selven solven yesuvae vali ena
vaalakiyil thammaiyea kondu vaalven
endrumea angey naan ummil vaalven - jeeviyamea

Post a Comment

0 Comments

Close Menu