Maa dhayavea deva dhayavea Lyrics in Tamil
மா தயவே தேவ தயவே
மானிலத்தில் தேவை எனக்கே
1. வாக்களித்த வானபரன்
வாக்கு மாறார் நம்பிடுவேன்
நம்பினோரைக் கைவிடாரே
நற்பாதமே சரணடைந்தேன் - மா
2. இயேசுவின் பொன் நாமத்தினால்
ஏதென்கிலும் கேட்டிடினும்
தம் சித்தம் போல் தந்திடுவார்
தந்தையிவர் எந்தனுக்கே - மா
3. சத்துருக்கள் தூஷித்தாலும்
சக்தியீந்தென் பட்சம் நிற்பார்
ஆதரவே அளித்திடுவார்
ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் - மா
4. என்னில் ஏதும் பெலனில்லையே
எந்தனுக்காய் இராப்பகலாய்
நீதியுள்ள நேசர் இயேசு
நிச்சயமாய் பரிந்துரைப்பார் - மா
5. தாய் வயிற்றில் இருந்த முதல்
தமக்காய் என்னை தெரிந்தெடுத்தார்
என் அழைப்பும் நிறைவேற
எப்படியும் கிரியை செய்வார் - மா
6. தம் வருகை தரணியிலே
தாமதமாய் நடந்திடினும்
சார்ந்தவரை அனுதினமும்
சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் - மா
Maa dhayavea deva dhayavea Lyrics in English
Maa thayave deva thayave
Maanilathil thevai enakke
1. Vaakkalitha vaanaparan
Vaakku maarar nampiduven
Nampinoraik kaividaare
Narpadhame saranadaindhen - Maa
2. Yesuvin pon naamaththinaal
Yethenkilum kettidinum
Tham siththam pol thanthiduvaar
Thandhai ivar enthanukke - Maa
3. Sathurukkal thooshithaalum
Sakthiyindhen patcham nirpaar
Aadharave alithiduvaar
Aaruthalai vaazhnthiduven - Maa
4. Ennil ethum belanillaiye
Enthanukkaai iraappagalaai
Needhiyulla nesar Yesuv
Nichchayamaaip parinduraippaar - Maa
5. Thaai vayittril irundha mudhal
Thamakkai ennai therindheduththaar
En azhaippum niraivera
Eppadiyum kiriyai seivaar - Maa
6. Tham varukai dharaniyile
Thaamathamaaip nadanthidinum
Saarndhavarai anudhinamum
Sornthidaamal jepithiduven - Maa
0 Comments