கர்த்தரின் வருகை நெருங்கிடுதே பாடல் வரிகள் | Kartharin Varugai Nerungiduthe Lyrics

கர்த்தரின் வருகை நெருங்கிடுதே என்பது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து, விழிப்புடனும் ஆயத்தத்துடனும் வாழ வேண்டும் என்ற செய்தியை எடுத்துரைக்கும் தமிழ் கிறிஸ்தவ பாடல். தேவ எக்காளம் முழங்க, இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் விசுவாசிகள் மறுரூபமாகி அவருடன் சேருவார்கள் என்ற நம்பிக்கையை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.

கர்த்தரின் வருகை நெருங்கிடுதே – Tamil Christian Song Lyrics

1. கர்த்தரின் வருகை நெருங்கிடுதே
காத்திருப்போம் மனம் பூரிக்குதே
தேவ எக்காளம் விண் முழங்கிடவே
தூதர்கள் ஆயத்தமே

தேவ கிருபையே அவர் கிருபையே
தேவகுமாரன் வெளிப்படும் நாளிலே
கண்ணிமைப் பொழுதே மாறிடுவோமே
மேகம் மறைந்திடுவோம்

2. திருடனைப் போல வந்திடுவார்
தீவிரமாய் நாம் விழித்திருப்போம்
சம்பத்தைச் சேர்க்கும் நாளதில் நம்மைச்
சொந்தமாய் வந்தழைப்பார்

3. லோத்தின் மனைவி நினைத்திடுவோம்
லோகத்தின் ஆசைகள் வெறுத்திடுவோம்
லெளகீக பாரம் பெருந்தீனி தள்ளி
தெய்வீகமாய் ஜொலிப்போம்

4. ஆவியின் முத்திரை பெற்றவரே
ஆயத்தமாய்த் தவிக்கின்றனரே
புத்திர சுவிகாரம் அடைந்திடவே
பாத்திரர் ஆவோமே

5. நம் குடியிருப்போ பரத்திலுண்டே
நம் கிறிஸ்தேசுவும் அங்கு உண்டே
வல்லமையான தம் செயலாலே
விண் மகிமை அடைவோம்

6. தாமதம் வேண்டாம் வந்திடுமே
தம்திரு வாக்கு நினைத்திடுமே
இயேசுவே வாரும் ஆவலைத் தீரும்
ஏங்கி அழைக்கிறோமே

Kartharin Varugai Nerungiduthe – Thanglish Lyrics

1. Kartharin Varugai Nerungiduthe
Kaathiruppom Manam Poorikkuthe
Deva Ekkaalam Vin Muzhangidave
Thoothargal Aayaththame

Deva Kirubaiye Avar Kirubaiye
Devakumaaran Velippadum Naalile
Kannimaip Pozhudhe Maariduvome
Megam Maraindhiduvom

2. Thirudanai Pola Vandhiduvaar
Theeviramaai Naam Vizhiththiruppom
Sambaththai Serkkum Naaladhil Nammai
Sondhamaai Vandhazaippaar

3. Loththin Manaivi Ninaiththiduvom
Logaththin Aasaigal Veruththiduvom
Loukeega Baaram Perundheeni Thalli
Deiveegamaai Jolippom

4. Aaviyin Muththirai Petravare
Aayaththamaai Thavikkinranare
Puththira Suvikaaram Adaindhidave
Paaththirar Aavome

5. Nam Kudiyiruppo Paraththil Unde
Nam Kristhesuvum Angu Unde
Vallamaiyaana Tham Seyalaale
Vin Magimai Adaivom

6. Thaamatham Vendaam Vandhidume
Thamthiru Vaakkkai Ninaiththidume
Yesuve Vaarum Aavalai Theerum
Yengi Azhaikkirome

கர்த்தரின் வருகை நெருங்கிடுதே – பாடல் பற்றிய குறிப்பு

இந்த தமிழ் கிறிஸ்தவ பாடல் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. தேவ எக்காளம் முழங்கும் நாளில், தேவகுமாரன் வெளிப்படும் போது விசுவாசிகள் மறுரூபமாகி அவருடன் சேருவார்கள் என்ற நம்பிக்கையை பாடல் எடுத்துரைக்கிறது.

உலகத்தின் ஆசைகள் மற்றும் லௌகீக கவலைகளில் சிக்காமல், ஆவியின் முத்திரையுடன் ஆயத்தமாகவும் விழிப்புடனும் வாழ வேண்டும் என்ற அழைப்பையும் இந்த பாடல் வழங்குகிறது. இயேசுவின் வருகைக்காக விசுவாசத்துடன் காத்திருந்து, “இயேசுவே வாரும்” என்று ஆவலுடன் அழைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய செய்தியாகும்.

Kartharin Varugai Nerungiduthe – Keywords

Kartharin Varugai Nerungiduthe Lyrics, Kartharin Varugai Nerungiduthe Song, Kartharin Varugai Nerungiduthe Tamil Lyrics, Kartharin Varugai Nerungiduthe Christian Song, கர்த்தரின் வருகை நெருங்கிடுதே பாடல் வரிகள், கர்த்தரின் வருகை நெருங்கிடுதே Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Tamil Gospel Songs, Tamil Worship Songs, Christian Songs Tamil, Christian Song Lyrics Tamil, Jesus Second Coming Songs Tamil, Jesus Coming Songs Tamil, இயேசுவின் வருகை பாடல்கள், இயேசுவின் இரண்டாம் வருகை பாடல்கள், Tamil Christian Worship Songs, Tamil Christian Songs Lyrics

Post a Comment

0 Comments

Close Menu