Aayiram aayiram paadalkalai Christian Song Lyrics in Tamil
1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களேன்
அல்லேலூயா ! அல்லேலூயா !
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை ! அல்லலில்லை !
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்
2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களேன்
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களேன் - அல்லேலூயா
3. நெஞ்சின் நாவின் நாதங்களே
நன்றி கூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்களால்
மேலும் பரவசம் கூடுங்களேன் - அல்லேலூயா
4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனின் கீதம் பாடுங்களேன் - அல்லேலூயா
Aayiram aayiram paadalkalai Christian Song Lyrics in English
1. Aayiram aayiram paadalkalai
Aaviyil magizhnthae paadungalaen
Yaavarum thaemolip paadalkalaal
Yesuvaip paadida vaarungalaen
Allaelooyaa ! Allaelooyaa !
Endrellaarum paadiduvoam
Allalillai ! Allalillai !
Aanandhamaayp paadiduvoam
2. Puthiya puthiya paadalkalaip
Punainthae pannkalum saerungalaen
Thuthigal niraiyum kaanangalaal
Thozhuthae iraivanaik kaanungalaen - Allaelooyaa
3. Nenjin naavin naathangalae
Nandri koorum geethangalaal
Minjum oasaith thaalangalaal
Maelum paravasam koodungalaen - Allaelooyaa
4. Entha naalum kaalangalum
Iraivanaip poatrum naerangalae
Sinthai kulirnthae aandukalaay
Seeyoanin geetham paadungalaen - Allaelooyaa
பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):
'ஆயிரம் ஆயிரம் பாடல்களை' என்பது இறைமகன் இயேசு கிறிஸ்துவை ஆவியிலும் உண்மையிலும் ஆனந்தக் களிப்புடன் துதித்துப் பாடும்படி அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் உற்சாகமான ஆராதனைப் பாடல் ஆகும். இயேசுவை அண்டிக்கொண்ட விசுவாசிகளுக்கு இனி எந்த அல்லலும் இல்லை என்ற விடுதலையின் மகிழ்ச்சியையும், புதிய புதிய பாடல்களை இயற்றித் தாளங்களோடு பரவசமாகத் துதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும் இப்பாடல் விவரிக்கிறது. வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் காலங்களிலும் இறைவனைப் போற்றி, உள்ளம் குளிர்ந்து சீயோனின் பாடல்களைப் பாடி மகிழ விசுவாசிகளை இப்பாடல் நேர்த்தியாக வழிநடத்துகிறது.
Search Keyword : Aayiram aayiram paadalkalai lyrics, Aayiram aayiram padalgalai aaviyil magilnthe lyrics in Tamil and English, Alleluya alleluya endrellarum paadiduvom song, Allalillai aananthamaai padiduvom lyrics, Tamil Christian convention songs, joyful praise and worship Tamil songs lyrics PPT chords.
0 Comments