ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே | Sthoththiram Sthoththiram Iyesuvukke Lyrics in Tamil

Sthoththiram sthoththiram yesuvukkea Lyrics in Tamil

1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே
துதி சாற்றிடுவோம் என்றுமே
சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும்
ஆற்றியே தேற்றுவதால்

இன்ப இயேசுவின் திவ்ய நாமத்தை
எந்தன் ஜீவிய நாட்களெல்லாம்
நன்றியோடு நாம் பாடிடுவோம்

2. தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும்
அவர் நம்மோடு இருப்பேன் என்றார்
அக்கினிச் சூளையில் நடந்திடும் வேளையிலும்
விக்கினம் சூழாதென்றார் - இன்ப இயேசுவின்

3. கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும்
வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார்
நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு
நல்குவேன் கிருபை என்றார் - இன்ப இயேசுவின்

4. திகையாதே கலங்காதே என்றுரைத்தார்
அவர் திக்கற்றோராக விடார்
பயப்படாதே சிறுமந்தையே என்றழைத்தார்
பாரில் நம் மேய்ப்பனவர் - இன்ப இயேசுவின்

5. சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலுமே
பங்கம் வராது காப்பார்
நம்மையே மீட்கவே தம்மையே ஈந்து
தரணியில் மாண்டுயிர்த்தார் - இன்ப இயேசுவின்

6. சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே
சீயோனில் சேர்த்திடுவார்
மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்
மகிமையின் சாயல் அணிவோம் - இன்ப இயேசுவின்



Sthoththiram sthoththiram yesuvukkea Lyrics in English

1. Sthoththiram sthoththiram Iyesuvukke
Thuthi saatriduvoam endrume
Saetrilirunthemmai meetteduththendrum
Aatriye thaetruvathaal

Inba Iyesuvin thivya naamaththai
Enthan jeeviya naatkalellaam
Nanriyoadu naam paadiduvoam

2. Thanneeraik kadanthidum vaelaiyilum
Avar nammoadu iruppaen endraar
Akkini soolaiyil nadanthidum vaelaiyilum
Vikkinam soozhaathendraar - Inba Iyesuvin

3. Kashtangal nashtangal soozhnthidum
Vaelaiyil soarndhidaa pelan alippaar
Naalum nam kuraigal yaavaiyum kandu
Nalkuvaen kirubai endraar - Inba Iyesuvin

4. Thigaiyaathae kalangaathae endruraiththaar
Avar thikkatroaraaga vidaar
Bayappadaathae sirumanthaiyae endrazhaiththaar
Paaril nam maeyppanavar - Inba Iyesuvin

5. Singgaththin kuttigal thaazhchiyadainthaaluma
Pangam varaathu kaappaar
Nammaiyae meetkavae thammaiyae eenthu
Tharaniyil maanduyirththaar - Inba Iyesuvin

6. Seeyoanin raajanaay seekkiram vanthumae
Seeyoanil saerththiduvaar
Mannavan Iyesuvai santhikkum annaalil
Magimaiyin saayal anivoam - Inba Iyesuvin


பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):

'ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே' என்பது பாவச் சேற்றிலிருந்து நம்மைத் தூக்கியெடுத்து ஆற்றித் தேற்றிய ஆண்டவர் இயேசுவுக்கு வாழ்நாளெல்லாம் நன்றி செலுத்தும் உன்னதப் பக்திப் பாடல் ஆகும். வெள்ளம் போன்ற சோதனைகள் மற்றும் அக்கினிச் சூளை போன்ற உபத்திரவங்களில் அவர் தரும் பாதுகாப்பு, கஷ்ட நஷ்டங்களில் தாங்கும் பலன், மற்றும் குறைவுகளை நிறைவாக்கும் அவருடைய அளவற்ற கிருபையை இப்பாடல் விவரிக்கிறது. நல்ல மேய்ப்பனாக நம்மைத் திக்கற்றோராக விடாமல் காத்து, முடிவு பரியந்தம் நடத்தி, சீயோன் ராஜனாக மீண்டும் வரும்போது தம்முடைய மகிமையின் சாயலை நமக்குத் தருவார் என்ற நம்பிக்கையை இப்பாடல் அழகாக எடுத்துரைக்கிறது.


Search Keyword : Sthoththiram Sthoththiram Iyesuvukke lyrics, Sthothiram sthothiram Yesuvukke thuthi saatriduvom lyrics in Tamil and English, Inba Yesuvin thivya naamathai lyrics, Thannirai kadanthidum velayilum song, traditional Tamil Christian devotional songs, Jesus worship songs lyrics Tamil, old Tamil Christian hymns, Tamil Christian songs chords and PPT lyrics.

Post a Comment

0 Comments

Close Menu