Manam magilndhu dhinam pugalndhu Lyrics in Tamil
1. மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
ஆவியில் ஆர்ப்பரிப்போம்
ஆத்தும நேசர் அன்பர் இயேசு
வேகம் வருகின்றாரே
ஆயத்தமாகிடுவோம் நாமே
அயராது உழைத்திடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே அவர்
துதி பாடிடுவோம்
2. விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு
உலகினை ஜெயித்திடுவோம்
மகிமையை நோக்கி உலகினை மறந்து
ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம் - ஆயத்தமாகிடுவோம்
3. வசனங்கள் நிறைவேறும் கடைசி
காலம் கருத்தினில் கொண்டிடுவோம்
ஜீவ சுடரொளி பட்டயம் ஏந்தி
சாத்தானை ஜெயித்திடுவோம் - ஆயத்தமாகிடுவோம்
4. ஆவியின் வரங்கள் யாவுமே
பெற்று ஜோதியாய் விளங்கிடுவோம்
தேவ குமாரன் இராஜாதி இராஜன்
வேகம் வருகின்றாரே - ஆயத்தமாகிடுவோம்
Manam magilndhu dhinam pugalndhu Lyrics in English
1. Manam magizhnthu dhinam pugazhnthu
Aaviyil aarpparippoam
Aaththuma naesar anbar Yesu
Vegam varugindraarae
Aayaththamaagiduvoam naamae
Ayaraathu uzhaiththiduvoam
Allaelooyaa aanandhamae avar
Thuthi paadiduvoam
2. Visuvaasam anbu nambikkai kondu
Ulaginai jeyiththiduvoam
Magimaiyai noakki ulaginai maranthu
Oattaththil jeyam peruvoam - Aayaththamaagiduvoam
3. Vasanangal niraivaerum kadaisi
Kaalam karuththinil kondiduvoam
Jeeva sudaroli pattayam yaenthi
Saaththaanai jeyiththiduvoam - Aayaththamaagiduvoam
4. Aaviyin varangal yaavumae
Petru joathiyaay vilangiduvoam
Deva kumaaran raajaathi raajan
Vegam varugindraarae - Aayaththamaagiduvoam
பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):
'மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து' என்பது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மிகுந்த ஆவிக்குரிய உற்சாகத்துடனும் ஆயத்தத்துடனும் எதிர்நோக்கும் ஓர் எழுப்புதல் பாடல் ஆகும். வேதாகம வசனங்கள் நிறைவேறும் இந்தக் கடைசி காலத்தை உணர்ந்து, விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஆகியவற்றோடு உலகத்தையும் சத்துருவையும் ஜெயிக்க வேண்டும் என்று இப்பாடல் அறைகூவல் விடுக்கிறது. ஆவியின் வரங்களைப் பெற்று சுடரொளியாக விளங்கி, பரலோக மகிமையை நோக்கி விசுவாச ஓட்டத்தில் ஜெயம் பெற விசுவாசிகளை உற்சாகப்படுத்தும் உன்னதப் பாடலாக இது திகழ்கிறது.
Search Keyword : Manam magizhnthu dinam pugazhnthu song lyrics, Manam magilnthu dinam pukalnthu lyrics in Tamil and English, Aayathamaagiduvom naame ayaraadhu song, Tamil Christian second coming songs lyrics, Aathuma nesar anbar Yesu vegam varugindrare lyrics, Tamil Christian songs chords and PPT lyrics.
0 Comments