அழிந்து போகின்ற ஆத்துமாக்களை | Azhindhu Pogindra Aathumaakkalai Lyrics in Tamil

Alinthu Pogindra Aathumaakkalai Lyrics in Tamil

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே ஆத்தும பாரமே

1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும் - தெய்வமே

2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் - தெய்வமே

3. எக்காள சப்தம் நான் மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன் சத்தியம் பேசுவேன் - தெய்வமே

4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன் - தெய்வமே

5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும் - தெய்வமே



Alinthu Pogindra Aathumaakkalai Lyrics in English

Azhinthu poagindra aaththumaakkalai
Dhinamum dhinamum ninaippaen
Alainthu thirigindra aattaiththaediyae
Oadi oadi uzhaippaen

Dheyvamae thaarumae aaththuma baaramae

1. Irulin jaadhigal paeroli kaanattum
Mariththa manitharmael velichcham udhikkattum - Dheyvamae

2. Thirappin vaasalil dhinamum nirkindraen
Suvarai adaikka naan dhinamum jebikkindraen - Dheyvamae

3. Ekkaala sabtham naan maounam enakkillai
Saamakkaavalan saththiyam paesuvaen - Dheyvamae

4. Kanneer sinthiyae vithaigal thoovinaen
Gembeera saththamaay aruvadai seykiraen - Dheyvamae

5. Oodhaari maindhargal ummidam thirumbattum
Vinnagam magizhattum virunthu nadakkattum - Dheyvamae


Album: Jebathotta Jeyageethangal - Vol 6
Lyrics, Tune & Sung By: Father S J Berchmans
Music: Richard Vijay

பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):

'அழிந்து போகின்ற ஆத்துமாக்களை' என்பது ஆத்தும இரட்சிப்பிற்கான தாகத்தையும், நற்செய்திப் பணிக்கான ஆழமான பாரத்தையும் வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த எழுப்புதல் பாடல் ஆகும். வழிதப்பி அலையும் ஆடுகளைத் தேடிக் கண்டடைவதும், இருளில் வாழும் ஜனங்கள் மேல் தேவ வெளிச்சம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஏக்கமும் இப்பாடலின் மையக்கருத்தாக அமைகிறது. திறப்பின் வாசலில் நின்று தேசத்திற்காக ஜெபிக்கும் சாமக்காவலனாகவும், கண்ணீரோடு விதை விதைத்து கெம்பீரத்தோடு ஆத்துமாக்களை அறுவடை செய்து பரலோக விருந்தில் இணைக்கும் ஊழிய வைராக்கியத்தை இப்பாடல் நேர்த்தியாகப் பறைசாற்றுகிறது.


Search Keyword : Azhindhu pogindra aathumaakkalai song lyrics, Azhinthu pogindra aathumakkalai lyrics in Tamil and English, Father S J Berchmans songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 6 songs, Deivame thaarume aathuma baarame lyrics, Thirappin vaasalil dinamum nirkindren lyrics, Tamil Christian revival songs lyrics PPT chords.

Post a Comment

0 Comments

Close Menu