Baktharae, vaarum aasai aavalodum Lyrics in Tamil
1. பக்தரே, வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.
2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன் - சாஷ்டாங்கம்
3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்;
‘விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்!’ - சாஷ்டாங்கம்
4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்
தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும் - சாஷ்டாங்கம்
Baktharae, vaarum aasai aavalodum Lyrics in English
1. Bhaktharae, vaarum
Aasai aavalodum
Neer paarum, neer paarum ippaalanai
Vaanoarin raajan Kiristhu piranthaarae!
Saashtaangam seyya vaarum,
Saashtaangam seyya vaarum,
Saashtaangam seyya vaarum, Yesuvai.
2. Devaathi Devaa, joathiyil joathi,
Maanida thanmai neer veruththileer
Dheyva kumaaran, oppillaatha mainthan - Saashtaangam
3. Maeloagaththaarae, maa gembeeraththoadu
Jenma narseithi paadip poatrumaen;
'Vinnil karththaa neer maa magimai yaerpeer!' - Saashtaangam
4. Yesuvae, vaazhga! Indru jenmiththeerae,
Pugazhum sthuthiyum undaagavum
Thanthaiyin vaarththai maamsam aanaar paarum - Saashtaangam
பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):
'பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்' என்பது உலகப் புகழ்பெற்ற "O Come, All Ye Faithful" (Adeste Fideles) என்ற பாரம்பரியக் கிறிஸ்துமஸ் கரோல் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவமாகும். மானிடரின் மீட்பிற்காகத் தேவ குமாரன் பாலகனாக அவதரித்ததை நினைவுகூர்ந்து, அவரை ஆவலோடு வந்து பணிந்து சாஷ்டாங்கமாக ஆராதிக்க அனைத்து இறைமக்களையும் அழைப்பதே இப்பாடலின் முக்கியக் கருப்பொருள் ஆகும். தேவனுடைய வார்த்தை மனித மாம்சமாக அவதரித்த உன்னத அன்பையும், பரலோக சேனைகளுடன் இணைந்து பாடும் மகிழ்ச்சியையும் இப்பாடல் கம்பீரமாகப் பறைசாற்றுகிறது.
Search Keyword : Bhaktharae vaarum aasai aavalodum lyrics, Bhakthare vaarum lyrics in Tamil and English, O Come All Ye Faithful Tamil lyrics, Saashtaangam seyya vaarum Yesuvai song lyrics, Tamil Christmas songs lyrics, traditional Tamil Christmas carols, Christmas hymns Tamil PPT chords.
0 Comments