எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை | Ekkalathum Karthar Yesuvai Lyrics in Tamil

Ekkaalaththum karththar Yesuvai Lyrics in Tamil

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம் இயேசுவே

1. மண்ணின் வாழ்வு மாயையாகும்
மனிதன் காண்பது பொய்யாகும்
மாறிடா நேசர் இயேசுவை
மாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும்

2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்
கலங்கிடேனே வாழ்க்கையிலே
அசையா எந்தன் நம்பிக்கை
நங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும்

3. அவரை நோக்கி ஜெபிக்கும் போது
அருகில் வந்து உதவி செய்வார்
கைவிடாமல் கருத்துடன்
காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும்

4. தேவ பயமே ஜீவ ஊற்று
மரண கண்ணிக்கு விலக்கிடுமே
தேவ பாதையில் நடந்திட
தேவாவியானவர் உதவி செய்வார் — எக்காலத்தும்

5. முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்
தேவ சாயலாய் மாறியே
தேவாதி தேவனை தரிசிப்பேனே — எக்காலத்தும்



Ekkaalaththum karththar Yesuvai Lyrics in English

Ekkaalaththum karththar Yesuvai
Enthan thunaiyaay yaetriduvaenae
Uyarvo thaazhvo ennilayo
Enthan thanjam Yesuvae

1. Mannin vaazhvu maayaiyaagum
Manithan kaanbathu poiyaagum
Maaridaa naesar Yesuvai
Maaraatha anbu endrum pothumae — Ekkaalaththum

2. Alaigal mothi ethirvanthaalum
Kalangidaenae vaazhkkaiyilae
Asaiyaa enthan nambikkai
Nangooram enthan Yesu pothumae — Ekkaalaththum

3. Avarai noakki jebikkum poathu
Arugil vanthu udhavi seyvaar
Kaividaamal karuththudan
Kaaththennai endrum nadaththiduvaar — Ekkaalaththum

4. Deva bayamae jeeva ootru
Marana kannikku vilakkidumae
Deva paathaiyil nadanthida
Devaaviyaanavar udhavi seyvaar — Ekkaalaththum

5. Munnarinthu azhaiththa Devan
Mudivu varaiyum nadaththiduvaar
Deva saayalaay maariyae
Devaathi Devanai tharisippaenae — Ekkaalaththum


Original Song: Pastor Vincent Samuel (Madras Pentecostal Assembly)
Music: JF Sathy Victor

பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):

'எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை' என்பது வாழ்க்கையின் எந்த ஒரு சூழலிலும் இயேசுவையே ஒரே தஞ்சமாகவும் துணையாகவும் ஏற்று வாழும் விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஆவிக்குரிய பக்திப் பாடல் ஆகும். உலக வாழ்க்கையின் மாயையையும் மனித உறவுகளின் நிலையற்ற தன்மையையும் தாண்டி, இயேசுவின் மாறாத அன்பே போதுமானது என்பதை இப்பாடல் விவரிக்கிறது. துன்ப அலைகள் மோதும் போது நங்கூரமாகத் தாங்கும் கர்த்தரின் கிருபையையும், ஜெபத்தைக் கேட்டு உதவி செய்யும் அவரது உடனிருப்பு, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் மற்றும் முடிவு பரியந்தம் நம்மைக் காத்து அவருடைய சாயலாக மாற்றும் வாக்குத்தத்தத்தையும் இப்பாடல் நேர்த்தியாகப் பறைசாற்றுகிறது.

Search Keyword : Ekkalathum Karthar Yesuvai lyrics, Ekkaalaththum karthar Yesuvai song lyrics in Tamil and English, Pastor Vincent Samuel songs lyrics, JF Sathy Victor Christian songs, Enthan thanjam Yesuve song lyrics, Mannin vaazhvu maayai aagum lyrics, Tamil Christian worship songs, traditional Tamil hymns lyrics chords PPT.

Post a Comment

0 Comments

Close Menu